பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆம்ரோ சினிமாஸ் தயாரிக்கும் முதல் படம் 'ரேட்'. விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. ஆன்லைன் மோசடி உண்மையில் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது. இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் படம் தான் இந்த ரேட்.
புதுமுகம் ஜோயல் விஜய் என்பவர் இயக்க, நாயகிகளாக ரேஷ்மா வெங்கட், சாயா தேவி மற்றும் கன்னிகா ரவி நடிக்கின்றனர். அஸ்வின் ஹேம்நாத் இசையமைக்க, சீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.