பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் நந்தா மற்றும் பிதமாகன் படம் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சூர்யாவின் 41வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மீனவராக சூர்யா நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக கடற்கரை பகுதியில் மீனவர்கள் வசிக்கும் குடிசைகள் போல பல குடிசை வீடுகளை நிஜமாகவே உருவாக்கி பட்டப்படிப்பை நடத்தி வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவற்றை பிரிக்காமல், அந்தப்பகுதியில் வசிக்கும் வீடில்லாத மக்கள் சிலருக்கே அவற்றை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அவரது இந்த முடிவுக்கு அந்த பகுதி மக்களிடமும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.