ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
"இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் , வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சார் அமித்ஷா கூறியிருந்தார்.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் "தமிழ்தான் இணைப்பு மொழி" என்ற கூறினார். மேலும் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளை பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது இசை அமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிம்புவும் "தமிழால் இணைவோம்" என்று தங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.