ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 16 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இம்முறை பாலாஜி முருகதாஸ் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். பிக்பாஸ் 4 சீசனில் ரன்னராக வந்த அவர், இந்த முறை ஆரம்பம் முதலே ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். தொடர்ந்து அவரின் நேர்மையான விளையாட்டு, பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இறுதி போட்டிக்கு பாலா, நிரூப் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகினர். இதில் பாலா வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை நிரூப்பும், மூன்றாம் இடத்தை ரம்யாவும் பிடித்தனர். பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்ற பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இறுதிவாரம் வரை தாக்குப்பிடித்த ஜூலி, இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேற்றப்பட்டார். கடந்த சீசனில் ஏடாகூடமாக விளையாடி பெயரை கெடுத்துக் கொண்ட ஜூலி, இம்முறை பொறுப்பாக விளையாடி மக்களின் மனங்களை வென்றிருந்தார். அவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூட சிலர் கருதினர்.
இந்நிலையில், அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றுள்ள தனது சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை ஜூலி நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் ரியல் சேம்பியன் என பாலாஜியையும், பீப்பிள்ஸ் சாம்பியன் என ஜூலியையும் ஒருசேர வாழ்த்தி வருகின்றனர்.