வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
காதல் கண் கட்டுதே, நாடோடிகள்- 2 , முருங்கக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். சினிமாவில் இன்னும் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கவும், அதிக வாய்ப்புகளை பெறவும் மெல்ல கவர்ச்சி ரூட்டிற்கு மாறி வருகிறார் அதுல்யா ரவி. சமீபகாலமாக சற்றே கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லோ நெக், ஸ்லீவ்லெஸ் உடைகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அதுல்யாவை முழுமையாக மாற்றி கமர்ஷியல் பட இயக்குனர்களின் கவனத்தை அவர் பக்கம் திரும்பி இருக்கிறது.
தற்போது தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் அதுல்யா கமிட்டாகியிருக்கிறார். தமிழிலிருந்து தெலுங்குக்கு சென்று கொடி நாட்டி வரும் வரலட்சுமி, நிவேதா பெத்துராஜ் போன்ற நடிகைகள் பட்டியலில் அடுத்து அதுல்யா ரவியும் இடம் பிடிக்கலாம்.