குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ராஜமவுலி அதையடுத்து ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வெளியிட்டார். கடந்த 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைக்கு வந்த முதல் நாளில் 230 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது வரை 700 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த ராஜமவுலி தற்போது அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்தப் படத்தை ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் இயக்கப்போகிறாராம். பெரும்பாலான படப்பிடிப்பை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இந்த படம் அவரது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களை விடவும் பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகிறதாம்.