சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஏப்ரல் மாதம் இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் மிக நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள்.
இந்தநிலையில், காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த போது சமந்தாவுக்கு ஒரு அழகிய கம்மல் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வாழ்த்து அட்டையில் அப்படத்தில் சமந்தாவின் கேரக்டரான கதீஜாவை குறிப்பிட்டு டியர் கதிஜா, வித் லவ் கண்மணி என தனது கேரக்டர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நயன்தாரா . இதற்கு நன்றி தெரிவித்து உள்ள சமந்தா அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.