படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
நடிகர் அஜித்தின் 61வது படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவதாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். போனி கபூர் தான் தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் அஜித் நேற்று அதிகாலை கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
மேலும் கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அஜித் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும் நன்றி கூறி தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் . மேலும் அவர்களுடைய குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.