தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது ரூ.4 கோடி பணம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் மிஸ்டர் லோக்கல் படத்தில் தனக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும், மீதி ரூ.4 கோடியை தரவில்லை. தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛மிஸ்டர் லோக்கல் படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த கதையை எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன். உண்மை நிலவரம் இப்படியிருக்க, படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடருவது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.