அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து மகான் என்கிற படத்தில் நடித்தார் விக்ரம். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்து வந்த துருவநட்சத்திரம் படத்தில் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி அதையும் முடித்து கொடுத்துள்ளார் விக்ரம். இன்னொரு பக்கம் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் நடித்து வந்த கோப்ரா படமும் போஸ்ட் புரடக்சனில் இருக்கிறது
இந்த நிலையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்திற்கு மைதானம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மைதானத்தை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாலேயே மைதானம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக விக்ரம் சில பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள தயாராகி வருகிறார் என்றும், மே மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது.