23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடிக்கப் போகிறார் விஜய். தமன் இசையமைக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் . மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், தமன்னா என சில நடிகரிகளின் பெயர் அடிபட்ட நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஹிந்தியில் தோனியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தோனி படத்தில் காதலி பிரியங்கா வேடத்தில் நடித்த திஷா பதானி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இவர்தான் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பக்கத்தில் முதல் பக்கத்தில் சமந்தா ஆடியது போன்ற ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். என்றாலும் விஜய் 66ஆவது படத்தின் நாயகி யார் என்பது மிகப்பெரிய குழப்பமாகவே இருந்து வருகிறது.