விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் |
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கும் நெல்சன், அடுத்தபடியாக ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். மேலும், வடிவேலு, பிரியங்கா மோகன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற மே மாதம் தொடங்கும் நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இதற்கு முன்பு தான் இயக்கியுள்ள டாக்டர், பீஸ்ட் படங்களைப் போன்று ரஜினியின் 169 ஆவது படத்திற்கும் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதற்கு நெல்சன் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கதை விவாதத்திற்கு நடுவே தனது உதவி இயக்குனர்களுடன் தீவிர டைட்டில் ஆலோசனைகளையும் அவர் நடத்தி வருகிறார்.