ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசகங்கள் திரையில் இடம் பெற வேண்டும் என்ற விதி கடந்த சில வருடங்களாக இருக்கிறது. ஆனால், அத் திரைப்படங்களின் போஸ்டர்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்த ரஜினிகாந்த்தே தன்னுடைய கடந்த சில படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று சொல்லி அதை கடை பிடித்தும் வருகிறார். ஆனால், அவரது முன்னாள் மருமகனான தனுஷ் தொடர்ந்து தன்னுடைய படங்களின் போஸ்டர்களில் புகை பிடிக்கும் காட்சியை அனுமதித்து வருகிறார்.
இதற்கு முன்பும் அவர் நடித்த “மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி” பட போஸ்டர்களில் புகை பிடிக்கும் போஸ்டர்கள் வெளியாகின. தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்” படம் ஆரம்பமானபோது வெளியான போஸ்டர்களிலும் புகை பிடிக்கும் போஸ்டரே இடம் பெற்றது. நேற்று வெளியான புதிய போஸ்டர் ஒன்றிலும் தனுஷ் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் போஸ்டர் தான் இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து இது மாதிரியான போஸ்டர்களை வெளியிடும் தனுஷ் மீது சமூக ஆர்வலர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.