ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் போன்ற ஒரு பாலியல் கொடூரம் விருதுநகரில் நடந்துள்ளது. சமீபகாலமாக பாலியல் வன்முறைகள் அதிகரித்தும் உள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
பாலியல் குற்றச்செய்திகள் புற்றீசல் போல் புறப்பட்டு வருகின்றன. அதில்  அதிகம் சிறார்கள் சம்பந்தப்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. வேலூரில்  ஆட்டோவில்  ஒரு இளம் ஜோடியை கடத்தி சென்று பெண்ணை கற்பழித்த கும்பலில் ஒருவன் 18  வயத்துக்குட்பட்டவன். விருதுநகரில்  இளம்பெண்ணை மிரட்டி  கூட்டாக கற்பழித்தவர்களில்  4  பள்ளி மாணவர்களும் அடக்கம்.  
அந்த பெண் உதவி கேட்டு அணுகியவரும் கூட அவரை... தமிழ்நாட்டில் எங்கே போகிறோம்? எங்கே போகிறோம்? என்று  நாம் கேட்டு கொண்டே இருக்கையில், தமிழ்நாடு நாசமாய் போய்விட்டது . திருத்த முடியாத, திருந்த முடியாத அதலபாதாளத்திற்குள் வீழ்ந்து விட்டோமா?
இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்துள்ள தமிழக காவல்துறைக்கு நன்றி .  முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள் சட்டசபையில் பேசும்போது  கட்சி சார்பு பார்க்காமல் விசாரணை நடத்தப்படும் என்கிறார். விரைவாக தண்டனை கொடுக்கப்படும் என்கிறார்.  இது உண்மையாக நடந்தால் நன்றி தெரிவித்து பாராட்டும் முதல் ஆளாக நான் நிற்ப்பேன்.  
திமுக என்றாலே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற முதலமைச்சரே முனைப்புடன் இறங்கினால் அதை விட நம்பிக்கை தரும் விஷயம் என்ன இருக்க முடியும்?  கட்சி, குடும்பம், பணம், பதவி போன்ற கட்டாயங்களை கடந்து, சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு  இவற்றை இந்த அரசு சாதிக்குமா? சாதிக்குமேயானால் அதை கொண்டாடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால்...யாருக்கும் பயப்படாமல் எதற்காகவும் பின் வாங்காமல் நடந்த அநீதியை நிரூபிக்க வேண்டியது காவல் துறையின் கடமை.  குறைந்த காலத்திலேயே குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்,  அந்த  கயவர் கூட்டம் தண்டிக்கப்பட வேண்டும்.
முக்கியமாக,  வயதை காரணமாக காட்டி அந்த பள்ளி மாணவர்கள் தப்பிக்க கூடாது.  அப்படியே சட்டப்படி தண்டனை கிடைக்காது என்ற நிலைமை வருமென்றால், கடவுளாக பார்த்து அந்த கயவர்களுக்கு சரியான முடிவை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 
இவ்வாறு கஸ்தூரி எழுதியுள்ளார்.