இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |

பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்து சாமீபத்தில் வெளியான படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. பெரும்பாலும் ஆக் ஷனை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு முழுக்க காதல் படமாக இருந்ததால் ஏமாற்றமே கிடைத்தது. இதனால் படம் வசூலை ஈட்டவில்லை. படத்தின் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது . இதையடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட பிரபாஸ் ராதே ஷ்யாம் படத்துக்காக வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




