அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையின் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். கடந்த 10 வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் எல்லாம் நடித்துவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்து அண்மையில் அவர் பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர், 'இதற்கு முன்பு இரண்டு கதைகளை கேட்டிருந்தேன். ஆனால், சொல்ல மறந்த கதையில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா கதாபாத்திரத்துடன் என்னால் தனிப்பட்ட முறையில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் வீட்டு உதவியாளர் ஒரு விதவை. குழந்தைகளுக்கான அவரது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். அவருடன் பேசி புரிந்து கொண்ட பின்பே சாதனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இன்று சமூக ஊடகங்கள் மக்களின் ரசனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் காதல், மனைவி, கணவர், மாமியார் என சீரியல்களை எடுக்க முடியாது. அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். எனவே, தொலைக்காட்சியில் நல்ல கதைகளை கொண்டு வருவது முக்கியம்' என கூறியுள்ளார்.