பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
2018ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கேஜிஎப். கோலார் தங்கச்சுரங்கம் உருவானதன் பின்னணியில் தயாரான இந்த படம் கன்னட சினிமா சரித்திரத்தில் பெரிய வெற்றி சாதனையும், வசூல் சாதனையும் படைத்து.
4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதியன்று வெளிவருதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சூர்யா, கார்த்தி படங்களின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தமிழகத்தில் வெளியிடுகிறார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யஷ்சுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.