ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டது. 50 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் நிதி பற்றாக்குறை. நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் தயாரித்து அதன் மூலம் நிதிச் சுமையை சமாளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நின்றது. இதற்கிடையில் அடுத்து வந்த தேர்தல், அதன் பிறகு நடந்த வழக்குகள் என நடிகர் சங்க நிர்வாகம் தனி அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் தடுமாறியது.
நடிகர் சங்க அறக்கட்டளை தவிர மற்ற நிர்வாகத் தேவைக்கு நிதி இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் கடந்த 2 வருடங்களாக நன்கொடை இல்லை. சந்தா இல்லை. இதனால் பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறது நடிகர் சங்கம். இந்த நிலையில் தற்போது பொருளாளராக மீண்டும் தேர்வு பெற்றிருக்கும் கார்த்தி இதுகுறித்து கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-2019 காலகட்டம் வரலாற்றில் முக்கியமான ஆண்டுகள். நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். அதனால் உறுப்பினர்கள் பயனடைந்தார்கள். நடிகர் சங்க கட்டிடம் உருவானது. அது எங்க டீமோட அயராத உழைப்பு. அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் தடைபட்டு போச்சு. அது ரொம்ப வருத்தமான விஷயம்.
இப்போது கிடைத்திருக்கும் வெற்றி முக்கியமானது. 2 வருட சட்டபோராட்டத்துக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றி. இப்போது எங்களுக்கு 3 ஆண்டுகள் கிடைத்திருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம். நடிகர் சங்கத்தில் நிதி நெருக்கடி இருப்பது உண்மைதான். அதனை ஒவ்வொன்றாக சமாளித்து விட்ட பணிகள் அனைத்தையும் செய்து முடிப்போம். விரைவில் சங்க நிர்வாகிகள் அனைவரும் முதல்வரை சந்திப்போம். என்றார்.