'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முகம் அறிமுகமானார். தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. பாடி பில்டரான அர்விந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இது இவரது முதல் போட்டியாகும்.
இந்த வெற்றி குறித்து பகிர்ந்துள்ள அர்விந்த், 'இந்த வெற்றிக்காக இவள் (ஸ்ருதி சண்முகம்) முழு அளவில் தியாகம் செய்துள்ளார். நான் செய்ய வேண்டியதெல்லாம் முழுமையான அர்ப்பணிப்புடன் விட்டுக் கொடுக்காமல் ஜெயிப்பது மட்டுமே' என கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே அழகான புரிதலுடன் இணைந்திருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.