அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்தியத் திரையுலக நடிகைகள் இந்திய சுற்றுலாவை பிரபலப்படுத்துகிறார்களோ இல்லையோ பக்கத்தில் உள்ள தீவு நாடான மாலத்தீவு சுற்றுலாவை நன்றாகப் பிரபலப்படுத்துகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே இந்திய நடிகைகளை தங்களது நாட்டுக்கு அழைப்பதில் மாலத்தீவு ரிசார்ட் ஓனர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து பல நடிகைகள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்வதும், அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு ரசிகர்களைக் கவர்வதுமாக இருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையையும் தூண்டிவிடுகிறார்கள்.
தற்போது மாலத்தீவு சுற்றுலாவில் தமன்னா 'டர்ன்'. ஆனால், சில நடிகைகளைப் போல இதுவரையிலும் பிகினி புகைப்படங்களை அவர் பகிரவில்லை. இருந்தாலும் கிளாமரான சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது தமிழில் தமன்னா ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. சில தெலுங்குப் டங்களிலும், ஹிந்திப் படங்களிலும் மட்டுமே நடித்து வருகிறார்.