கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
வினோத் இயக்கத்தில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. படத்துக்காக இரு வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. படம் இரண்டு வாரங்களைத் தாண்டி ஓடினாலே அதிகம் என்று பலரும் பேசினார்கள். ஆனால், அதையும் மீறி படம் 25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் வசூல் பற்றி கூட பலரும் பல வித தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், படம் நஷ்டத்தைக் கொடுக்கவில்லை என்றுதான் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். அப்படி ஏதும் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் இந்நேரம் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை அணுகி பிரச்சினை செய்திருக்க மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இருப்பினும் ஒரு சில ஏரியாக்களில் படத்திற்கான லாபம் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
இந்த வாரம் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக இருப்பதாலும், 'வலிமை' படம் மார்ச் 25ல் ஓடிடியில் வெளியாக இருப்பதாலும் இன்று முதல் தியேட்டர்களில் கூட்டம் வராமல் போக வாய்ப்புகள் அதிகம்.