ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? |
தற்போது தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் அடுத்தபடியாக சிரஞ்சீவி நடிக்கும் 154வது படத்தில் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆச்சாரியா படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார். இந்தப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதோடு இதற்கு முன்பு தெலுங்கில் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவர் கவர்ச்சிகரமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.