புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் - கீர்த்திசுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது கையில் துப்பாக்கி வைத்துக் க்கொண்டிருக்கும் போட்டோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஆக்ஷன் கலந்த வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தை அடுத்து உதயநிதியின் மாமன்னன், பாலா - சூர்யா இணையும் படம் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படம் என 3 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.