'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஜய் ஆண்டனி, இதில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
இந்த படம் தெலுங்கில் ஹத்யா என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பின்னணியில் படம் தயாராகி உள்ளது. கொலையாளி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுதான் திரைக்கதை என்றார்.
விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் தவிர, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.