என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்த ஷாலினி முதன்முதலில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது . இதன்பிறகு மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்த ஷாலினி, அஜித்தை திருமணம் செய்த பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பதை தவிர்த்துவிட்டார் .
அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சமூகவலைத்தளங்களை விரும்பாமலே இருந்து வருகின்றனர். அதனால் அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படங்கள் எப்போதும் வெளிவந்தாலும் வைரலாகிவிடும். இந்நிலையில் ஷாலினி தன் சகோதரி ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்கா உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் மகளின் புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அனோஷ்கா மளமளவென வளர்ந்துவிட்டாரே என ஆச்சர்யப்படுகிறார்கள்.