ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
'பாகுபலி, சாஹோ' படங்களை அடுத்து பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ராதேஷ்யாம்' படம் நாளை மறுதினம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள இப்படத்தின் உலக அளவிலான வியாபாரம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வெளியிட்டு உரிமை 105 கோடி, வெளிநாடு உரிமை 24 கோடி, வட இந்தியா உரிமை 40 கோடி, கர்நாடகா உரிமை 17 கோடி, தமிழ்நாடு உரிமை 10 கோடி, கேரளா உரிமை 4 கோடி என மொத்தமாக 200 கோடி வரையில் வியாபாரம் நடந்துள்ளதாம்.
இப்படத்தின் 5 மொழி ஓடிடி உரிமையையும் முன்னணி ஓடிடி தளம் ஒன்று 250 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 350 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர், ஓடிடி உரிமைகளின் மூலம் மட்டுமே 550 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது என்கிறார்கள்.
பிரபாஸின் முந்தைய படங்களான 'சாஹோ, பாகுபலி 2, பாகுலி 1' ஆகிய படங்கள் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அது போல இந்தப் படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' வசூலை மிஞ்சினால்தான் பிரபாஸின் அடுத்தடுத்த பான்--இந்தியா படங்களுக்கும் வியாபாரம் இன்னும் அதிகம் நடக்கும் என்கிறது டோலிவுட் வட்டாரம்.