Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாக்கிசான் படத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட வலிமை கிளைமாக்ஸ் ; வைரலாகும் வீடியோ

06 மார், 2022 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Valimai-climax-copied-from-the-jackie-chan-film

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் சண்டை காட்சிகளும், பைக் சாகச காட்சிகளும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றன. இந்தப்படத்தின் சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார்.

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு முன்னதாக வில்லன் கார்த்திகேயா, அஜித்தின் குடும்ப உறுப்பினர்களை இரும்பு வடங்களில் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு, ரிமோட்டின் மூலமாக இயக்கி அவர்களை கீழே விழ செய்வது போல போக்கு காட்டி அஜித்தை பயமுறுத்துவார்.

இந்தநிலையில் தற்போது இந்த காட்சி 2004ல் ஜாக்கிசான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து 'தழுவி' எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஜாக்கி சானுக்கும் இதேபோன்ற அனுபவம் தான் அந்தப்படத்தில் நடக்கிறது. இந்த இரண்டு சண்டை காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராகவா லாரன்ஸ் பட டைரக்சனில் இருந்து விலகிய இரட்டை இயக்குனர்கள்ராகவா லாரன்ஸ் பட டைரக்சனில் இருந்து ... நானே வருவேன் படத்தில் நடிக்கும் மும்பை நடிகை நானே வருவேன் படத்தில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raj -  ( Posted via: Dinamalar Android App )
07 மார், 2022 - 10:26 Report Abuse
Raj its called thinking alike..anils will not understand
Rate this:
06 மார், 2022 - 18:45 Report Abuse
மங்காத்தா டா அதென்ன தழுவி எடுக்கப்பட்டது, காபி அடிக்கப்பட்டதுன்னு சொல்லு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in