பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தனது சிகப்பு நிற மாருதி செலிரியோ காரில் வந்தார். அந்த காரின் பதிவு எண்களை வைத்து சிலர் அந்தக் காருக்கான இன்ஷூரன்ஸ் 2020ம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது எனவும், 2021-ஆம் ஆண்டுக்கான ஓர் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது எனவும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.
இதுகுறித்து விஜய் தரப்பு அந்த காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டது. "யு-டியூப் சேனல் நடத்துகிறவர்கள், தனியாக வெப்சைட்ட நடத்துகிறவர்கள் தங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுபோன்ற காரியங்களை செய்கிறார்கள்" என்று வருத்தப்பட்டார் விஜய் நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர்.