டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கோலிவுட், பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட், மாலிவுட் என எந்த மொழி சினிமா நடிகைகளாக இருந்தாலும் அவர்களைப் புடவையில் பார்ப்பதே பல ரசிகர்களுக்கு ஒரு தனி ரசனையாக இருக்கும். அவர்கள் என்னதான் மாடர்ன் உடைகளில் கிளாமராக புகைப்படங்களை எடுத்துப் பதிவிட்டாலும் புடவை போட்டோ என்றால் அதில் தனி 'கிக்' இருக்கத்தான் செய்கிறது என்பது பல ரசிகர்களின் கருத்தாக இருக்கும்.
புடவைகளில் ஒரு சில நடிகைகள்தான் பேரழகிகளாக இருப்பார்கள். அவர்களில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர். அவரது மகள் ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கிளாமர், பிகினி புகைப்படங்களைத்தான் அதிகம் பதிவிடுவார். ஆனால், திடீரென அவருக்கு புடவை மீது காதல் வந்துவிடும். நேற்று தன்னுடைய இன்ஸ்டா தளத்தில் பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த மஞ்சள் நிறப் புடவையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் ஜான்வி. இளமைக்கால ஸ்ரீதேவியைப் பார்ப்பது போலவே இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் ஷாரூக்கானின் மகள் சுஹானா கான், ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் வடிவமைத்த சிவப்பு நிற புடவை அணிந்த புகைப்படங்கள் பாலிவுட்டினரை ஆச்சரியப்படுத்தின.




