லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு விமானநிலையத்தில் விஜய் சேதுபதியை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்ற துணை நடிகர் தாக்க முயற்சித்தார். தன்னை விஜய்சேதுபதியின் ஆட்கள் தாக்கியதால் திருப்பி தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு மகாகாந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசினர்.
ஆனால், மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில், அவதூறு பரப்பினர். எனவே, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 4ம் தேதி விஜய்சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சம்பவம் நடந்த பெங்களூரில்தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.