விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து நடிகை காவ்யா தாபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் விசாரணை நடத்திய பெண் போலீசின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் காவ்யா தாபரை கைது செய்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.