துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிரஞ்சீவி மனைவியாக 'சைரா' படத்தில் நடித்த நயன்தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடித்து வருகிறார்..
மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'தனி ஒருவன்' படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு இருவரும் 'வேலைக்காரன்' படத்திலும் இணைந்து பணிபுரிந்தனர். இப்போது தெலுங்கில் 'காட்பாதர்' படம் மூலமும் இணைந்துள்ளனர்.
நயன்தாராவின் முக்கியக் காட்சிகள் அனைத்தும் 'காட்பாதர்' படத்திற்காகப் படமாக்கப்பட்டுவிட்டதாம். விரைவில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பை நயன்தாரா முடித்துவிடுவார் என்கிறார்கள். சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு 'காட்பாதர்' வெளியாகும்.