டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துவிட்ட நெல்சன் திலீப்குமார் அடுத்தததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169வது படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. யோகிபாபு, சிவகார்த்திகேயன், விஜய், அடுத்தததாக ரஜினி என குறுகியகாலத்தில் படிப்படியாக முன்னேறி, நான்காவது படத்திலேயே தமிழ் சினிமா இயக்குனரின் உச்ச பட்ச இலக்கை தொட்டுவிட்டார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் அனிருத் தவிர மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் இன்னும் முடிவாகவில்லை. அதேசமயம் பீஸ்ட் படத்தில் நெல்சனுடன் பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சாவே இந்தப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்களுடன் பணியாற்றிய நெல்சனுக்கு பீஸ்ட் படப்பிடிப்பில் மனோஜ் பரமஹம்சாவுடன் அலைவரிசை ஒத்துப்போனது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.