எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி | ‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! |

விஜய் டிவியில் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக 'சூப்பர் சிங்கர் ஜீனியர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோடில் பாடிய கிரஷாங் என்ற சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில் 'தலைகோதும் இளங்காத்து' என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. சான் ரோல்டன் இசையில் பிரவீன் குமார் பாடிய இந்த பாடலை சிறுவன் கிரஷாங் மிகவும் நேர்த்தியாக அனைவரையும் நெகிழச் செய்யும் வகையில் பாடி முடித்தார். கிரஷாங் பாடுவதை கேட்டுவிட்டு நடுவர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா உள்ளிட்டோர் வெகுவாக பாரட்டினர்.
கிரஷாங் பாடிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் எமோஷனலாகி விட்டனர். அதிலும் எஸ்பி சரண் கிரஷாங்கை பாராட்டியதோடு, 'நீ இப்படியே சென்றால், 70, 80 வருஷம் பாடலாம். நீ தான் குட்டி எஸ்பிபி. நீ கடவுளின் குழந்தை' என வாழ்த்தி கண்கலங்கினார். தற்போது சிறுவன் கிரஷாங் பாடிய 'தலைகோதும் இளங்காத்து' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் கிரஷாங்கிற்கு தற்போது பலரும் ரசிகர்களாக மாறி வருகிறார்கள்.




