2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷூ சுந்தர். நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்த வைஷூ சுந்தரை சின்னத்திரை இன்முகத்துடன் வரவேற்றது. தமிழ் சின்னத்திரை உலகில் பலராலும் அறியப்படும் வைஷூ சுந்தர், தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளார். வைஷூ சுந்தர் தெலுங்கில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'குங்கமப்பூ' என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் புரோமோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடர் ஸ்டார் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
முன்னதாக தமிழில் 'ரன்' என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான வைஷூ சுந்தர், தற்போது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றார். மேலும், சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.