மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா |
தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை 'அரபிக்குத்து'.
கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.
ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13ம் தேதியன்றே வெளியிட்டார்கள். தென்னிந்திய அளவில் 'ஆல் டைம் ரெக்கார்டு' என 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள், 8 லட்சம் லைக்குகள் என 'சர்க்காரு வாரி பாட்டா' குழு கொண்டாட ஆரம்பித்தது. ஆனால், அவர்களது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது.
'கலாவதி' பாடல் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக 'பீஸ்ட்' சிங்கிளான 'அரபிக்குத்து' முறியடித்துவிட்டது. நேற்று மாலை யூ டியூபில் வெளியான இந்தப் பாடல் இதுவரையிலும் 20 மில்லியன் பார்வைகள், 2 மில்லியன் லைக்குகள் சாதனை என 17 மணி நேரத்திற்குள்ளாகவே மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகள், அதிக லைக்குள் என புதிய சாதனையைப் படைத்துள்ள' அரபிக்குத்து'. யு டியூப் சாதனைகளில் விஜய் பாடல்கள்தான் எப்போதுமே முன்னிலை என்பதை அவரது ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்.