அண்ணாத்த படத்தையடுத்து ரஜினியின் 169வது படத்தை இயக்குகிறார் நெல்சன். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் இப்போது ரஜினி பட வாய்ப்பை பெற்றுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் இந்தப்படத்தில் இணையபோகிறாராம். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி, மந்தாகினி தேவி என்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ஐஸ்வர்யாராய் என்பது குறிப்பிடத்தக்கது.