டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆரம்பமானது. தெலுங்கில் 'ஜதி ரத்னலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே லண்டன், புதுச்சேரி ஆகிய இடங்களை மோஷன் போஸ்டரில் காட்டியிருந்தார்கள். இரண்டு இடங்களையும் கதைக்களமாகக் கொண்ட படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வெளிநாட்டு கதாநாயகி ஒருவர் தேவையாம். ராஜமவுலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் அந்த வெளிநாட்டு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படத்தின் கதாநாயகிகள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.




