ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.
விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். இதன் காரணமாகவே இப்படி கூறியிருக்கிறார்.
விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா குறித்து படித்து வருபவர். விஜய்யை வைத்து தனது முதல் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் துருவ் விக்ரம் தான் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார். அதனால் சஞ்சய் தனது முதல் படத்தை விஜய்யை வைத்து இயக்குவாரா? இல்லை துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.