குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனை நயன்தாராவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் மார்ச் மாதம் வெளிவருகிறது. இது ஒரு முக்கோண காதல் கதை. அதனை தன் பாணியில் காமெடி ரொமான்ஸ் கலந்து இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். படம் தொடர்பான வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்.
நேற்று அவர் வெளியிட்ட போஸ்டர் டைட்டானிக் படத்தில் கப்பலின் முனை பகுதியில் நின்று கொண்டிருக்கும் ஜாக் - ரோஸ் போஸ்டரை அப்படியே உல்டா செய்து விஜய் சேதுபதி, நயன்தாராவுடனும், சமந்தாவுடன் இருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனின் இந்த போஸ்டர் வைரலாகி உள்ளது. சிலர் விக்னேஷ் சிவனின் ஐடியாவை பாராட்டினாலும், சிலர் புகழ்பெற்ற படத்தின் புகழ்பெற்ற டிசைனை அப்படியே காப்பி அடிக்கலாமா? என்றும் விமர்சித்து வருகிறார்கள்.