பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துரு விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான், இந்த படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மகான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் ஆடுகளம் நரேன் சிறுவனாக இருக்கும் தனது மகனை பார்த்து காந்தி மாதிரி ஒரு மகானாக வாழ்வியா? என்று திரும்ப திரும்ப கேட்பது போன்று டீஸர் ஆரம்பிக்கிறது. அந்த மகன் தான் பின்னர் விக்ரம் ஆக மாறுகிறார்.
இதையடுத்து தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி காந்தி மகனாக விக்ரம் வாழ்ந்தாரா? இல்லை அதற்கு நேரெதிராக வாழ்ந்தாரா? என்பதையே இந்த இரண்டு நிமிட டீஸர் தெரிவிக்கிறது. முக்கியமாக இந்த டீஸரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இளமையான வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் விக்ரம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளே டீசர் முழுக்க இருக்கும் நிலையில், முடிவில் ஒரே ஷாட்டில் மட்டும் துருவ் விக்ரம் தோன்றுகிறார். இப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் இணைந்து வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.




