டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த போது அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறிய மிஷ்கின், அதையடுத்து ஏற்கனவே தான் இயக்கி வெற்றி பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆண்ட்ரியாவை பிரதானப்படுத்தி எடுத்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மிஷ்கின் அப்படி செய்யவில்லை. பிசாசு-2 படத்தை அடுத்து தான் இயக்கும் புதிய படத்திற்கு விஜய் சேதுபதியை நாயகனாகவே ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் தற்போது பிசாசு-2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.