காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பான்-இந்தியா நாயகனாக மாறிவிட்டார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் 'சலார்'. இப்படம் ஸ்ருதிஹாசனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி நேற்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றியும் அவரது உணவு உபசரிப்பு பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.
“சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். இயக்குனர் பிரஷாந்த்தின் இயக்கம் வித்தியாசமான பார்வை கொண்டது.
பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவர்தான். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று விரும்புபவர். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது சாப்பாட்டு முறை நார்மலான ஒன்று அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.