''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆர்.டி.நேசன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவந்த படம் 'ஜில்லா'. இப்படமும் அஜித் நடித்த 'வீரம்' படமும் அந்த வருடப் பொங்கலுக்கு போட்டி போட்டது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
'ஜில்லா' படத்தை ஹிந்தியில் 'போலீஸ்வாலா குண்டா 2' என்ற பெயரில் டப்பிங் செய்து யு டியுபில் கடந்த 2018ம் வருடம் வெளியிட்டார்கள். அந்தப் படம் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
தென்னிந்திய மொழிகளிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்படும் படங்களில் தெலுங்குப் படங்களுக்குத்தான் அதிக பார்வைகள் கிடைக்கும். குறிப்பாக 'புஷ்பா' நாயகன் அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் அந்த விதத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றுள்ளன. அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்குப் படமான 'துவ்வட ஜகன்னாதம்' இதுவரையில் 458 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இருப்பினும் பெல்லம்கொன்டா சீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'ஜெய ஜானகி நாயக' தெலுங்குப் படத்தின் ஹிந்தி டப்பிங் 562 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
விஜய் தமிழில் நடித்த பல படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூ டியுபில் வெளியாகி உள்ளன. அவற்றில் முதல் முறையாக 200 மில்லியன் பார்வைகள் சாதனையை ''ஜில்லா' படம் படைத்துள்ளது.