டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் அதிக ரசிகர் பலம் கொண்டவர் என்பதிலும் அவரது படங்கள் அதிகம் வசூலிப்பவை என்பதிலும் சந்தேகமே இல்லை.. ஆனால் 18 வருடங்களாக இந்த திரையுலகில் வெற்றி பவனி வந்தாலும் கூட, சமீப வருடங்களில் திடீரென புகழ்பெற்று வளர்ந்துவிட்ட விஜய் தேவரகொண்டாவின் சமூகவலைதள பாலோயோயர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சற்று கீழேதான் அல்லு அர்ஜூன் இருந்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை 12 மில்லியன் பாலோயர்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. ஆனால் 'புஷ்பா ; தி ரைஸ்' படம் வெளியானபின் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் பலம் இன்னும் அதிகரித்து அவையெல்லாம் இன்ஸ்டாகிராம் பாலோயர்களாக மாறியுள்ளன.
ஆம்.. தற்போது 14.5 மில்லியன் பாலோயர்களுடன் இருக்கும் விஜய் தேவரகொண்டாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு 16 மில்லியன் பாலோயர்களுடன் முதல் இடத்தில் ஜம்மென்று அமர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன். குறிப்பாக கடந்த பத்து நாட்களுக்குள் மட்டுமே புதிதாக பத்து லட்சம் பாலோயர்கள் அல்லு அர்ஜுனை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்றால் எல்லாம் புஷ்பா மயம் தான்.