இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் |
கலகலப்பான காமெடி படங்களுக்கு பெயர் வாங்கிய இயக்குனர் எம்.ராஜேஷ் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்றும் அதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்றும் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பேசப்பட்டது.. ஆனால் அந்தப்படத்திற்கு முன்னதாக சாந்தனுவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார் என்கிற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஹன்சிகா மற்றும் ஜனனி ஐயர் இருவரும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறதாம்.
இந்த தகவலை அந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்ற, எம்.ராஜேஷ் படங்களின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான லக்கி நாராயண் என்பவர் தெரியப்படுத்தியுள்ளார். ஒகே ஒகே படத்தில் ஹன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள வரும் வெளிநாட்டு மாப்பிள்ளையாக நடித்திருந்தவர் தான் இந்த லக்கி நாராயண். இந்தப்படத்தில் ஹன்ஷிகாவுடன் அதிக காட்சிகளில் தான் நடிப்பதாகவும், அதேசமயம் படத்தில் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார் நாராயண்.