பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஆர்யா, விஷால், சிம்பு இந்த மூன்று பேர்தான் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக தங்களது திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு வந்த ஹீரோக்கள்... அனால் ஆர்யாவின் வாழ்க்கையில் திடீர் புயலாக நுழைந்து திருப்பத்தை ஏற்படுத்தி அவரை குடும்பஸ்தனாக மாற்றி விட்டார் சாயிஷா. விஷாலின் திருமண விஷயம் நிச்சயதார்த்தம் வரை நடந்து, பின் நின்றுபோனது தனி சோகக்கதை.
இதில் சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு பின் அப்படியே அமுங்கி விடுவது வழக்கம் தான். அதேசமயம் தன்னுடன் ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருகிறார் என்றும் அவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கூட பரபரப்பான செய்தி வெளியானது..
இந்தநிலையில் வரும் பிப்-3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினத்தில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக சிம்புவின் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தற்போது சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கும் சிம்பு சூட்டோடு சூடாக திருமண அறிவிப்பையும் வெளியிடுவாரா என்பது தான் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.




