ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை சவுகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த பத்மஸ்ரீ விருதை சவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிதான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக ஒன்றிய அரசு என்கிற பெயரில் அழைத்து வருகிறது. இப்படி அழைப்பது ஏற்கனவே பல தரப்பினரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு கலைஞர், அதிலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்பவர் மத்திய அரசு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று கூறுவது ஒரு சார்புத்தன்மை உடையதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




