நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்கு தந்தையாக அல்லது அவர்களுக்கு வில்லனாக என ஒரு காலத்தில் தவறாமல் இடம்பெற்று வந்தவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜ். தெலுங்கில் இப்போதும் அது தொடர்ந்தாலும் கூட, தமிழில் விஜய், அஜித் என இரண்டு பேருடனும் அவர் இணைந்து நடித்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
விஜய்யுடன் கடைசியாக வில்லு படத்திலும் அஜித்துடன் பரமசிவன் படத்திலும் இணைந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது விஜய்யுடன் 11 வருடங்களுக்கு பிறகும் அஜித்துடன் 16 வருடங்களுக்கு பிறகும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கவுள்ளார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முதன்முறையாக விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இதற்கு முன் இயக்கிய தோழா (ஊபிரி) படத்திலும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மூன்றாவது முறையாக அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி சேரும் படத்திலும் அஜித் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ரசிகர்கள் எப்போதுமே இந்த 'கில்லி; கூட்டணியை மீண்டும் 'ஆசை'யுடன் ரசிக்க காத்திருக்கிறார்கள் என தாரளமாக சொல்லலாம்.