சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் என்றாலே அப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். பாடல்களும் சூப்பர் ஹிட் என்று சொல்லுமளவிற்கு அமையும். இது சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலப் படங்களில் இருந்தே அமைந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் - அனிருத், சிவகார்த்திகேயன் - இமான் ஆகிய கூட்டணிகள் வெற்றிகரமான கூட்டணிகளாகவும் வலம் வந்தன. இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். மற்றொரு படமான 'அயலான்' படத்திற்கு ஏஆர் ரகுமான் தான் இசை. இவரது இசையில் சிவா நடிக்கும் முதல் படம் இது.
அடுத்து சோனி பிக்சர்ஸ், கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21வது படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படி நடந்தால் அது சிவகார்த்திகேயன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் முதல் படமாக இருக்கும்.
'காப்பான்' படத்திற்குப் பிறகு ஹாரிஸ் இசையமைத்த படங்கள் தமிழில் எதுவும் வரவில்லை. அவருக்கு ஒரு இடைவெளி விழுந்துள்ளது. தற்போது தெலுங்கில் நிதின் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இடைவெளியை சரி செய்து ஹாரிஸ் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.